Colombo 05, Sri Lanka
24-07-2010
Colombo, Sri Lanka
16-06-2010
Colombo, Sri Lanka
21-05-2010
Dehiwala, Sri Lanka
21-05-2010
தமிழில் விண்டோஸ் லைவ் மெசஞ்சர்



by J.Mayooresan





இணையத்தில் இன்று பல்வேறு தயாரிப்புகள் ஒன்றின் பின் ஒன்றாக தமிழில் வெளிவரத் தொடங்கியுள்ளன. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கணனியில் முதன் முறையாக நான் கையை வைத்தபோது கணனியில் தமிழ் என்று ஏதும் இருக்கவில்லை. தமிழ் எழுத்துரு (கழவெ) ஒன்று இருந்தால்இ அதை வைத்து வேர்டில் தட்டச்சிடுவதே பெரிய சாதனையாக இருந்தது. அக்காலத்தில் பாமினி தட்டச்சு முறையில் கலகம்இ பாமினி போன்ற எழுத்துருக்களில் தமிழ் தட்டச்சு செய்து வந்தோம்.

பின்னர் மெல்ல மெல்ல விடையங்கள் மாறத் தொடங்கின. தமிழ் இடைமுகத்துடன் உபுண்டு வந்ததும் அதைப் பார்த்து பிரமித்துப் பலர் நின்றனர். அதைப் போல வின்டோஸ் எக்ஸ்.பிஇ ஆபீஸ் போன்றவற்றிற்கு மைக்ரோசாப்ட் தமிழ் இடைமுகம் வழங்கியது. இக்காலப் பகுதிக்குப் பின்னர் மெல்ல மெல்ல மற்ற நிறுவனங்களும் இந்திய மொழிகளான தமிழ்இ ஹிந்தி மொழிகளின் பால் கவனம் செலுத்த தொடங்கியது.

மெல்ல மெல்ல கூகுளும் தன் தயாரிப்புகள் பலவற்றிற்கு தமிழ் இடைமுகம் வழங்கத் தொடங்கியது. இதில் ஜி-மெயில்இ கூகிள் டொக்ஸ்இ கூகிள் தேடற்பொறிஇ பிளாக்கர்இ ஓர்குட் போன்றவற்றைத் குறிப்பிடலாம்.

அண்மையில் நண்பன் ஒருவன் தன்னிடம் ஸ்கைப் (ளுமலிந) இல்லைஇ வின்டோஸ் லைவ் மெசஞ்சரில் வா என்று அடம் பிடித்தான். என்ன கரைச்சல் இது என்று எண்ணியவாறு மைக்ரோசாப்டின் தளத்திற்குச் சென்று வின்டோஸ் லைவ் மெசஞ்சரை இறக்கப் போனேன். அவ்வாறு சென்றபோது உங்களுக்குத் தேவையான மொழியைத் தெரிவு செய்யச்சொல்லி ஒரு ட்ரொப் டவுண் பெட்டி இருந்தது. சரி! என்ன மொழிதான் இருக்குப் பார்ப்பமே என்று எண்ணி பார்த்தபோது அங்கே ஒரு ஆனந்த அதிர்ச்சிஇ தமிழில் லைவ் மெசஞ்சர் இருந்த்து.

உடனேயே அதைப் பதிவிறக்கி நிறுவத் தொடங்கினேன். அதன் போதுதான் தெரிந்த்துஇ லைவ் மெசஞ்சர் தவிரஇ லைவ் ரைட்டர்இ மெயில் போன்ற மென்பொருட்களும் தமிழ் இடைமுகத்துடன் தரப்படுகின்றன.




நீங்கள் நிறுவத் தொடங்கியதும் இங்குள்ள படத்தில் உள்ளவாறு விசார்ட் நகரத்தொடங்குகின்றது. ஆகா அருமை. தாய் மொழியில் கணனியைப் பார்ப்பதில் இருக்கும் ஆலாதியே தனி.



இதைவிட அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதி முழுக்க முழுக்க தமிழிலேயே இருக்கின்றது. அரைவாசி ஆங்கிலம் படித்து தங்களை மேதைகளாக காட்டுபவர்கள் இந்த வசதிகளை தமிழில் பயன்படுத்தப் போவதில்லை. ஆயினும் ஆங்கில அறிவே இல்லாமல் தமிழ் மட்டுமே அறிந்த பாமர மக்கள் கணனியைப் பாவிக்கத் தொடங்கும் போது இந்த தமிழ் இடைமுகங்கள் பெரும் பணியாற்றும் என்பதில் ஐயம் இல்லை.


இடைமுகம் தமிழ் என்று பலர் அதைப் பாவிப்பதே இல்லைஇ ஆனால் தமிழரான நாங்களே தமிழ் இடைமுகங்களைப் பாவிக்காதுவிட்டால் யார் பாவிப்பர்????


மைக்ரோசாப்டுக்கு முதல் யாகூ தன் மெசஞ்சரை தமிழில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் யாகூ தன் மெசஞ்சரை இதுவரை ஹிந்தி மொழியில் மட்டுமே வெளியிட்டுள்ளது. ஹிந்தி தவிர வேறு எந்த மொழியையும் யாகூ கணக்கெடுத்தும் பார்க்கவில்லை. அதே நேரம்இ யாகூ மெயில் கிளாசிக்கையும் ஹிந்தி இடைமுகத்துடன் வழங்குகின்றதுஇ அதுவும் தமிழ் இடைமுகத்துடன் இல்லை.


மைக்ரோ சாப்டின் இந்த முயற்சியின் பயனாக யாகூவும் தன் மெசஞ்சரை தமிழில் வெளியிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவளவு நாள் பொறுத்த நாம் இன்னும் சில காலம் பொறுத்துப் பார்க்க மாட்டோமா?


   



No votes yet

Post new comment

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.